Ads (728x90)

ஆஷஸ் தொடர் பற்றிய ருசிகர துளிகள்

ஷஸ் என்ற பெயர் உருவான பிறகு இவ்விரு அணிகள் (ஆஸ்திரேலியா,இங்கிலாந்து) இடையே இதுவரை நடந்துள்ள டெஸ்ட் தொடர்களில் 32-ல் ஆஸ்திரேலியாவும், 31-ல் இங்கிலாந்தும் கோப்பையை வென்றுள்ளன. 5 தொடர் சமனில் முடிந்தது.

* இவ்விரு அணிகள் மோதிய டெஸ்டுகளில் அதிகபட்ச ஸ்கேராக இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 903 ரன்களும் (1938-ம் ஆண்டு, லண்டன் ஓவல்), ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 729 ரன்களும் (1930-ம் ஆண்டு, லண்டன் லார்ட்ஸ்) குவித்துள்ளன. குறைந்த பட்சமாக ஆஸ்திரேலியா 36 ரன்னிலும் (1902-ம் ஆண்டு, பர்மிங்காம்), இங்கிலாந்து 45 ரன்னிலும் (1887-ம் ஆண்டு, சிட்னி) சுருண்டன.

* ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் 19 சதங்கள் உள்பட 5,028 ரன்கள் சேர்த்து (37 டெஸ்ட்), ரன் குவிப்பில் முதலிடம் வகிக்கிறார். ஆஸ்திரேலிய சுழல் நாயகன் ஷேன் வார்னே 195 விக்கெட்டுகளுடன் (36 டெஸ்ட்), விக்கெட் வீழ்த்தியதில் முதலிடத்தில் உள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget