தனுஷ், அமலா பால், சமுத்திரகனி, கஜோல் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி 2ம் பாகம் வருகிற 28ந் தேதி வெளிவருகிறது. இதனை சவுந்தர்யா ரஜினி இயக்கி உள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் தனுஷ் பேசியதாவது:
வி.ஐ.பி-1 மற்றும் வி.ஐ.பி-2 பாகம் என இரண்டுமே ஒரு கதா நாயகனையோ, கதா நாயகியோ மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அல்ல, தாய் பாசத்தை அடிப்படையாக கொண்ட படம். மேலும் வி.ஐ.பி படம் இரண்டாம் பாகத்துடன் முடிவடைந்து விடாது மேலும் 3, 4 ஆம் பாகம் என தொடரும். அதேபோன்று பவர்பாண்டி 2-ஆம் பாகத்தையும் எதிரிபார்க்கலாம், விஐபியின் முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தின் கதையம்சம் சற்று மாறுபட்ட கோணத்தில் பார்க்கப்பட வேண்டியது என்பதால் ஷான் ரோல்டனின் இசையை தேர்ந்தெடுத்தேன்.
படத்தொகுப்பாளர் பிரசன்னா எனக்கு மாரி, பவர்பாண்டி போன்ற படங்களில் மிகச்சிறப்பான பணியை செய்து கொடுத்தார். அவரின் படத்தொகுப்பில் டீசர் மற்றும் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வி.ஐ.பி-2 படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி, எனது பிறந்த நாளன்று வெளியாவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. என்றார் தனுஷ்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment