தமிழ் திரைப்பட பாடலாசிரியர் சினேகன், உயர்திரு 420, யோகி உள்பட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ராஜராஜனின் வாள், கூத்து ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ளது.
நேற்று மதியம் சில மர்ம நபர்கள் சினேகன் வீட்டு கேட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டு கதவை திறக்க முயன்றுள்ளனர். அது முடியாததால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்து பொதுமக்கள் ஓடிவந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விருகம்பாக்கம் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சினேகன் தற்போது விஜய் டி.வி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த பிரிவைச் சேர்ந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தியிருக்ககூடும் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment