Ads (728x90)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி வயிற்று வலியால் துடித்தது கூட இந்தி பிக்பாஸின் இருந்து எடுக்கப்பட்ட காப்பி தான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்(உண்மைதன்மையை லைவ்டே முற்றிலுமாக துறக்கிறது).
பிக்பாஸ் நிகழ்ச்சியின் துவக்கத்தில் சக போட்டியாளர்களிடம் திட்டு வாங்கி திட்டு வாங்கி அழுத ஜுலி நேற்றைய எபிசோடில் திடீரென வயிற்றை பிடித்து கொண்டு கதறி அழுதார். அவருக்கு வயிற்றுபகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டதாக சக போட்டியாளர்கள் கூறினார்.
நமீதா, காயத்ரி உள்ளிட்ட சில போட்டியாளர்களே ஜூலி பொய் கூறுகிறார் இது நடிப்பு என்று கூறிய நிலையில் சமூக வலைதளங்கில் தற்போது வைரலாக பரவி வரும் புகைப்படம் ஒன்று பிக்பாஸ் நடப்பது அனைத்தும் ஸ்கிரிப்ட் தான் என்று எழும் சந்தேகத்திற்கு வலு சேர்த்துள்ளது.
தமிழ் பிக்பாஸில் ஜூலி வலியால் துடித்தபோது கவிஞர் சினேகன் அவரை தூக்கி சென்று ஓடியதை போன்று இந்தி பிக்பாஸிலும் டிட்டோவாக இதே போன்ற சம்பவம் நடைபெற்றதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் இது குறித்து உண்மைத்தன்மை சரியாக தெரியவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஜுலி கையில் அடிபட்ட போது அதற்கு நடிகர் ஸ்ரீ மருத்து போட்ட நிகழ்வும் இந்தி பிக்பாஸில் இருந்து எடுக்கப்பட்டது தான் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget