Ads (728x90)

ஏற்கனவே பல சலுகைகளை அறிவித்துள்ள ஜியோ நிறுவனம், தற்போது 4ஜி செல்போன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது பெரும்பாலானோரிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதில், பலரிடம் ஜியோ சிம் கார்டு இருக்கிறது. ஏனெனில், ஒரு நாளைக்கு 1 ஜிபி மற்றும் 2ஜிபி இலவச டேட்டாக்காள் வழங்கப்படுகிறது. எனவே, ஜியோவின் வாடிக்கையாளர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள்.

இந்நிலையில், ஜியோ 4ஜி செல்போன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என முகேஷ் அம்பானி தற்போது தெரிவித்துள்ளார். அந்த செல்போனை பெற வருகிற ஆகஸ்டு மாதம் 24ம் முதல் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
அதேபோல், ஒருமுறை டெபாசிட்டாக 1500 செலுத்த வேண்டும் எனவும், 36 மாதங்கள், அதாவது 3 வருடங்களுக்கு பின் அந்த தொகை திருப்பி அளிக்கப்படும் எனவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஸ்மார்ட்போன் வாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Post a Comment

Recent News

Recent Posts Widget