Ads (728x90)

பிக்பாஸ் ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே இந்த நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்ட் தான். ரியாலிட்டி ஷோ இல்லை என்று பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய கஞ்சாகருப்பு தற்போது உண்மையை போட்டு உடைத்துவிட்டார்.

சமீபத்தில் ஒரு எஃப்.எம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஞ்சா கருப்பு அப்போது 'பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாமே ஸ்கிரிப்ட் தான், ஆனால் நடிக்கறதுல தான் சிலபேர் கொஞ்சம் வீக் என்று கூறினார் . இதனால் பிக்பாஸ் பற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
 
ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களை அதிகரிக்கவும், டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கவும் அந்த தனியார் தொலைக்காட்சி செய்து வரும் தந்திரம் தான் பிக்பாஸ் என்றும் இது கமலுக்கும் தெரிந்தே நடப்பதாகவும், கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளதால் கமலும் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Post a Comment

Recent News

Recent Posts Widget