Ads (728x90)

பிக்பாஸ்நிகழ்ச்சியில் ஜூலி வயிற்று வலியால் துடிக்க, அனைவரும் பதறி பிக்பாஸிடம் டாக்டரை வரவழைக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் நமீதாவும் காயத்ரியும் மட்டும் ஜூலி நடிப்பதாக கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

இந்த நிலையில் ஜூலியை அழுகாதே என்று தேற்றிய ஓவியா, கவலைப்படாதே! நீ செத்தால் கூட ஒருசிலர் நீ நடிப்பதாகத்தான் சொல்வார்கள்' என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்
 

இதைக்கேட்ட காயத்ரி கடுப்பாகி, ஜூலியிடம், இனிமே நீ அக்கா, நொக்கான்னு என்கிட்டே வராதே! உனக்கும் எனக்கும் உள்ள உறவு முறிஞ்சிடுச்சு, இனிமேல் எதுவாக இருந்தாலும் ஓவியாகிட்டேயே கேட்டுக்கோ' என்று கூறிவிட்டார். இதனால் மேலும் ஜூலி அழுகவே இன்றைய நிகழ்ச்சி ஒரே அழுகாச்சியாக இருந்தது.

Post a Comment

Recent News

Recent Posts Widget