Ads (728x90)

மனைவிமார்கள் ஷாப்பிங் செல்லும் போது, அவர்களுடன் கடை கடையாக அலைந்து களைத்து போகும் கணவர்களுக்கு, ஓய்வு அளிப்பதற்காக சீனாவில் உள்ள மால்களில் முதல் முறையாக கணவர்களுக்கான ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது. 

டெலிபோன் பூத்கள் போன்று இருக்கும் இந்த ஓய்வறைகள் கண்ணாடியால் ஆனவை. இதில் மனைவிமார்கள் ஷாப்பிங் முடித்து வரும் வரை, கணவன்கள் ஓய்வு எடுப்பதற்காக வசதியாக இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் அல்லது டிவி பார்ப்பதற்கான ஸ்க்ரீன்களும் அமைக்கப்பட்டுள்ளது. மனைவியுடன் ஷாப்பிங் செல்ல விரும்பாத கணவர்களுக்காகவே இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


சிறை குகை போன்ற அறையில் ஓய்வு எடுப்பதற்கு நபர் ஒருவருக்கு 40,000 யென்கள் (6000 அமெரிக்க டாலர்) வசூலிக்கப்படுகிறது. இந்த அறைகளை மொபைல் போன் ஆப் மூலம் இலவசமாக முன்பதிவும் செய்து கொள்ளலாம். தற்போது சில மால்களில் மட்டும் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது. மக்களிடம் இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து விரைவில் பிற மால்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget