Ads (728x90)

பிக் பிரதர் என்ற வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக் பாஸ் எனப் பெயர் மாறி இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. முதல் சீசன் சோனி டிவியில் 2006ம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்தது. அர்ஷத் வர்சி அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் பின் அந்த நிகழ்ச்சி கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. ஷில்பா ஷெட்டி, அமிதாப் பச்சன் ஆகியோர் தொகுத்து வழங்கியதற்குப் பிறகு கடந்த 7 வருடங்களாக சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக வட இந்திய டிவியில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் தமிழில் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க 20 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்று முதல் தெலுங்கு டிவியான ஸ்டார் மா டிவியில் ஜுனியர் என்டிஆர் தொகுத்து வழங்க ஆரம்பமாகியுள்ளது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்னைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரம்மாண்டமான பிக் பாஸ் அரங்கில் படமாகி வருகிறது. ஆனால், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் படமாகாமல் புனேவில் படமாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். நடிகர்கள் பிரின்ஸ், தன்ராஜ், சம்பூர்ணேஷ், சமீர், சிவ பாலாஜி, ஆதர்ஷ், நடிகைகள் அர்ச்சனா, முமைத் கான், ஜோதி, ஹரி தேஜா, பாடகி கல்பனா, மதுப்ரியா, திரைப்பட விமர்சகர் மகேஷ் கத்தி, டிவி தொகுப்பாளர் கத்தி கார்த்திகா ஆகியோர் பிக் பாஸ் போட்டியில் உள்ளனர்.

ஜுனியர் என்டிஆர் நேற்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களிடையே மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget