Ads (728x90)

சிம்­பாப்வே அணி இலங்­கையை ஒருநாள் தொடரில் வீழ்த்­தி­யது கிரிக்­கெட்டின் ஆரோக்­கி­யத்­திற்கு நல்­லது என்று இந்­திய சுழற்­பந்­து­வீச்சாளர் ரவிச்­சந்­திரன் அஷ்வின் தெரி­வித்­துள்ளார்.மும்­பையில் விளம்­பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஷ்வின்                        கூறி­ய­தா­வது: சிம்­பாப்வே அணி இலங்­கையை வீழ்த்­தி­யதைப் பற்றிக் கூற வேண்­டு­மெனில், யார் வேண்­டு­மா­னாலும் வெல்­லலாம், யார் வேண்­டு­மா­னாலும் தோற்­கலாம் இப்­ப­டித்தான் கிரிக்கெட் ஆட்டம் போகும் என்றே கூறத் தோன்­று­கி­றது. 
நாளை ஆப்­கா­னிஸ்தான் வெற்றி பெறலாம். அப்­ப­டித்தான் ஒரு விளை­யாட்டு செல்ல வேண்டும். இது விளை­யாட்­டுக்கு ஆரோக்­கி­ய­மா­னது.
அதே­வேளை இந்­திய அணியின் புதிய பயிற்­சி­யாளர் குறித்து கேட்­ட­போது, புதிய பயிற்­சி­யாளர் பற்றி கருத்துக் கூறு­வது என் எல்­லைக்­குட்­பட்­ட­தல்ல. அப்­ப­டிப்­பட்ட விட­யங்­களில் நான் கருத்து கூறு­வது இல்லை. நான் சம­யோ­சி­த­மாகப் பேச­வில்லை. அது குறித்து கருத்துக் கூறு­வது நியா­ய­மற்­றது. எப்­போதும் போலவே இந்­திய அணி சென்று கொண்­டி­ருக்­கி­றது. போகப்போகத்தான் இது எப்படி பயனளிக்கும் என்று கூற முடியும் என்று தெரிவித்துள்ளார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget