Ads (728x90)

கோல்ப் விளை­யாட்­டின்­போது பெண்கள் லெக்கிங்ஸ், குட்­டை­யான தளர்­வான பாவாடை போன்ற ஆடை­களை அணி­யக்­கூ­டாது. அப்­படி அணிந்தால் 1000 டொலர்கள் அப­ராதம் விதிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உலக பணக்­கார விளை­யாட்­டு­களில் கோல்ப் போட்­டியும் ஒன்­றாக திகழ்ந்து வரு­கி­றது. ஆண்­களைப் போல் கோல்ப் விளை­யாட்டில் பெண்­களும் அதிக அளவில் முத்­திரை பதித்து வரு­கி­றார்கள். இவர்கள் கோல்ப் விளை­யா­டும்­போதும், இவ் விளை­யாட்டு தொடர்­பான நிகழ்ச்­சியில் கலந்து கொள்­ளும்­போது முகம் சுழிக்க வைக்கும் வகையில் ஆடை அணிந்து வரு­கி­றார்கள்.
வீராங்­க­னைகள் விளை­யா­டும்­போது மிகவும் ஆபா­ச­மாக தெரி­கி­றது. இதனால் பெண்­க­ளுக்­கான தொழில்­முறை கோல்ப் சங்கம், இந்த அதி­ரடி உத்­த­ரவை பிறப்­பித்­துள்ளது. ஆடைக் கட்­டுப்­பாட்டை மீறினால் 1000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget