யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர் பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கும் அதேநேரம் இதன் போது உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவிற்கு அனுதாபங்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் நீதிபதிகள் பாதுகாப்பு குறித்து அதிக அவதானம் செலுத்தும் விசேட செயற்திட்டம் ஒன்றினை முன்னெடுக்கவும் பணித்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பிலும் விசாரணை நடத்துவதற்கு விசேட பொலிஸ் குழுவொன்றினை நியமிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட்டின் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறான நேர்மையான அதி காரிகள் பொலிஸ் திணைக்களத்திற்கு எடுத்துகாட்டானவர்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Post a Comment