தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு நடைபெறும் வரையில், வடக்கு மாகாண சபையில் முரண்பாடு ஏற்படக் கூடிய விடயங்களை பிற்போடுவது என்று நேற்றுத் தீர்மானிக்கப்பட்டுள் ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக் கும் இடையேயான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ள பத்திரிகைச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
‘மற்றைய விடயங்களுடன் வடக்கு மாகாண சபையின் தற்போதைய நிலமையும் பரிசீலிக்கப்பட்டது. அங்கு எழுந்துள்ள நிலமை பற்றி முடிவுகளை எடுக்க முன்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லா கட்சித் தலைவர்களுடனும் பேச வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் எல்லாக் கட்சித் தலைவர்களையும் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
அது வரையில் வடக்கு மாகாண சபையில் முன்மொழியப்பட்ட பிரேரணைகள் உட்பட சபையில் எழும் ஏனைய முரண்பாட்டுக்கமைவதான கருமங்கள் பிற்போடப்படுவது அவசியம் என்றும் இணக்கம் காணப்பட்டது’ என்றுள்ளது.

Post a Comment