கடந்த முதலாம் திகதியிலிருந்து வரி சலுகை இலங்கைக்கு கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு வரி சலுகையை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும் நாடுகளுக்காக இந்த வரிச்சலுகையை வழங்க அமெரிக்க தீர்மானித்துள்ளது.
பயணப்பொதிகள் மற்றும் பணப்பைகள் உள்ளிட்ட பொருள்களை இலங்கை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் போது இதுவரைக்காலமும் 6 தொடக்கம் 20 வீதம் வரையான வரி செலுத்தப்பட்டது. அதற்காக வரிச் சலுகையே தற்போது இலங்கைக்கு கிடைத்துள்ளது எனறு தெரிவிக்கப்படடுள்ளது.
அமெரிக்காவின் பிரதான முதலீட்டு நாடுகள் பத்துக்குள் இலங்கையும் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment