யாழ்ப்பாணம், புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான சுவிஸ்குமார் என்பவரை கொழும்புக்குத் தப்பிச் செல்ல உதவினார் என்ற குற்றச்சாட்டில் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.
இந்தநிலையில் நேற்று அவசரமாக ஒன்றுக்கூடிய பொலிஸ் ஆணைக்குழு அவரை பணிநீக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியது என்று கூறப்படுகின்றது.
லலித் ஜயசிங்கவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment