Ads (728x90)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் போலிக் கையெழுத்துக்களை பயன்படுத்தி ஆவணம் தயாரித்தார் என குற்றம் சுமத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட  திஸ்ஸ அத்தநாயக்கவின் வழக்கு தொடர்பிலான சாட்சிகள் என்ற அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை விடுவிக்கப்பட்டுள்ளது. 
இதன்பிரகாரம், இதற்கு முன்னரும் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, கடமைகள் காரணமாக சாட்சியாளர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என அறிவித்திருந்தார்.
இதன்படி மீண்டும் அழைப்பாணை விநியோகிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget