Ads (728x90)

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து நடத்தட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர, உப பொலிஸ் பரிசோதகர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
நேற்று மாலை நல்லூர் ஆலயப் பின் வீதி வழியாகப் பயணித்த மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து இனந்தெரியாத நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்.
அதில் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
அவர்களில் பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர நேற்று இரவு 11 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
இவர் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக 17 ஆண்டுகள் கடமையாற்றி இருந்தார்.
மெய்ப்பாதுகாவலர்களின் சடுதியான செயற்பாட்டாலேயே மேல் நீதிமன்ற நீதிபதி பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget