சுவிட்சர்லாந்தில், 75 ஆண்டுகளுக்கு முன், காணாமல் போன தம்பதியரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில், 1942ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், மெசிலின் மற்றும் அவரது மனைவி பிரான்சின் இருவரும், மலைப்பகுதியில், தங்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்ற போது, காணாமல் போயினர். பல இடங்களில் தேடியும் அவர்களை பற்றி விபரம் தெரியவில்லை.
இதையடுத்து, அவர்களின் ஏழு குழந்தைகளும், அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், சமீபத்தில், சுவிட்சர்லாந்த்தின் தெற்கு பகுதியில், உயர்ந்த பனி மூடிய மலையில், பனிப்பாறை மீது இருந்த, உயிரிழந்த இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன. பல ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த அவர்கள் உடல்கள், சேதமடையாமல், பனியில் பாதுகாப்பாக இருந்துள்ளது.
இரண்டாம் உலக போர் காலத்தில், பழக்கத்தில் இருந்த உடையை, இருவரும் அணிந்துள்ளனர். புத்தகம், கைகடிகாரம் உள்ளிட்ட, அந்த காலத்து பொருட்கள் சிலவும், அவர்கள் உடல்கள் இருந்த பகுதியில் கைப்பற்றபட்டுள்ளன. இதையடுத்து, அவை, காணாமல் போன மெசிலின் தம்பதியரின் உடல்கள் தான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனினும், மரபணு சோதனைக்கு பின் தான், இது, உறுதிபடுத்தப்படும் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment