ஈராக், சிரியா உட்பட ஆறு முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள், அமெரிக்காவிற்கு வருவதற்கு, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் தடை விதித்தார்; இதற்கு, அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரிட்டன் தலைநகர் லண்டன் நகரின் மேயராக இருக்கும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாதிக் கானும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டிரம்பை கடுமையாக விமர்சித்து, சமூகவலைதளமான, 'டுவிட்டரில்' கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பிரிட்டனுக்கு வருமாறு, அந்நாட்டு பிரதமர் தெரசா மே, டிரம்புக்கு அழைப்பு விடுத்தார்; அவரது வருகைக்கான ஏற்பாடுகளை பிரிட்டன் அரசு செய்து வருகிறது.
அதேசமயம், அவரது வருகைக்கு, லண்டன் மேயர் சாதிக் கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'பிரிட்டனின் பாரம்பரியபடி, அமெரிக்க அதிபர்களுக்கு வழங்கப்படும், சிவப்பு கம்பள வரவேற்பு வழங்க கூடாது' என, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Post a Comment