Ads (728x90)

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித் நடித்து வெளியான படம் ‘பில்லா’. 2007ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடித்தார். பிரபு, நமிதா, ரகுமான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம்,  சூப்பர் டூப்பர் ஹிட்.
 
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், 2012ஆம் ஆண்டு வெளியானது. ஆனால், விஷ்ணுவர்தனுக்குப் பதில் சக்ரி டோலட்டி இந்தப்  படத்தை இயக்கியிருந்தார். அத்துடன், பார்வது ஓமனகுட்டன், ப்ருனா அப்துல்லா, வித்யுத் ஜம்வால் என நடிகர்களும் மாறியிருந்தனர். ஆனால், படம் படுதோல்வியைத் தழுவியது. தோல்வியைத் தாங்க முடியாத அதிர்ச்சியில்,  மருத்துவமனையில் அட்மிட் ஆனார் தயாரிப்பாளர்.
 
தனுஷ் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்தை, வேல்ராஜ் இயக்கினார். கஜோல், ரிது வர்மா என நடிகர்களும் மாறியுள்ளனர். எனவே, அஜித்துக்கு நடந்தது போல் தனுஷுக்கும் நடக்குமா?, இல்லை சக்சஸ் ஆகுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget