Ads (728x90)

'கோச்சடையான்' என்ற மோஷன் கேப்சரிங் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். தற்போது தனுஷ், அமலா பால், கஜோல் மற்றும் பலர் நடிக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

சமீபத்தில் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சௌந்தர்யாவிடம் எதிர்காலத்தில் தமிழில் யார் நடிக்கும் படத்தை இயக்க ஆசை என்று கேட்டதற்கு, 'அஜித் நடிக்கும் படத்தை இயக்க வேண்டும்' என்றார்.

சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சௌந்தர்யாவிடம், தெலுங்கு பத்திரிகையாளர்கள் எதிர்காலத்தில் தெலுங்கில் யார் நடிக்கும் படத்தை இயக்க ஆசை என்று கேட்டதற்கு 'சிரஞ்சீவி நடிக்கும் படத்தை இயக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.

தமிழில் அஜித்திற்கும், தெலுங்கில் சிரஞ்சீவிக்கும் ரசிகர்கள் மிகவும் அதிகம். அவர்களது படங்களை இயக்கினாலே ஒரு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்து வந்துவிடும். அதனால்தான் சௌந்தர்யா அப்படி கூறியிருக்கிறார் போலிருக்கிறது.

சௌந்தர்யா இயக்கியுள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget