Ads (728x90)

ஜூலை-21ஆம் தேதி.. நடிகர் மோகன்லால் மிக முக்கியமானதாக கருதும் நாள்.. அதைவிட அவரது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நாள்... ஆம். அன்றுதான் மாதந்தோறும் ஒருமுறை தனது மனதை பாதித்த, நெகிழவைத்த, கோபம் கொள்ளவைத்த ஏதாவது ஒரு சமூக விஷயத்தை பற்றி தனது பிளாக்கில் எழுதுவார் மோகன்லால்..

அதில் பொது பிரச்சனைகள் குறித்தும் எழுதப்படுவதால், அரசியல் தரப்பில் இருந்து அதை கவனிப்பதற்கும் பதில் கொடுப்பதற்கும் கூட ஆட்கள் தயாராக இருப்பார்கள்.

ஆனால் கடந்த மாதம் மோகன்லால் பிளாக்கில் எதுவும் எழுதவில்லை.. காரணம் 'வில்லன்', 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' ஆகிய படங்களில் மாறிமாறி நடித்து வருவதால், மோகன்லாலுக்கு அமைதியாக அமர்ந்து எழுதுவதற்கான நேரமே கிடைக்கவில்லை.. சரி இந்த மாதமாவது எழுதுவார் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்தமுறையும் ஏமாற்றத்தையே பரிசாக வழங்கியுள்ளார் மோகன்லால்.

ஆனால் மிக முக்கியமாக தன்னால் இந்த மாதமும் எழுத முடியவில்லை என்பதை தனது பேஸ்புக்கில் அறிவித்து மீண்டும் ஒருமுறை என்னை மன்னியுங்கள் என ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார் மோகன்லால். ஆனால் இந்தமுறை மலையாள திரையுலகில் சுழன்றடித்து வரும் சர்ச்சை காரணமாகவே மோகன்லால் தனது பிளாக்கில் எதுவும் எழுத விரும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget