ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் 17வது கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் மாநாடு அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எரீவன் ஹெவொரன்சியினால் அரச தலைவருக்கு ஒரு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் மற்றும்; பன்னாட்டு பிராந்திய உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் அரச தலைவரின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பணிப்பாளர் நாயகம் கிங்ஸ்லி பெர்னாண்டோ, கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் மாநாட்டின் தலைவர் செய்ஜி டகாஜி, ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் பிரதி பொதுச் செயலாளர் Masarori Kondo ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Post a Comment