Ads (728x90)

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில், தினமும் பரபரப்பாக வைப்பதற்காக வீட்டில் ஏதாவது ஒரு நாடகத்தை அரங்கேற்றுவது பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடர் கதையாக உள்ளது.

பிக் பாஸ் டாஸ்கில் ஒரே குடும்பமாக எல்லோரும் இருக்கவேண்டும் என்றும், ஒவ்வொருவருக்கும் உறவு  முறைகளை அவர்களே தேர்ந்தெடுக்க வைத்து, டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பிக் பாஸ் ஒரு வைரக்கல்லை கொடுத்து அதை பாதுகாக்கவேண்டும் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த வைரக்கல்லை பிக் பாஸ் வீட்டில் உள்ள ஒருவரே  அல்லது வெளியில் இருந்து யாரேனும் வந்து அதை திருடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் விருந்தாளியாக வருகிறார் ஓவியா. அவர் வந்தவுடன் ஜூலி தனது அண்ணியான காயத்ரியை அறிமுகப்படுத்துவார். அப்போது ஓவியா காயத்ரியை பார்த்து அண்ணி பன்னி மாதிரி இருக்காங்க என்று சொல்லிவிட்டு சிரித்துகொண்டே செல்வார். இதனை கேட்டு வீட்டில் உள்ளவர்களும் சிரிப்பார்கள்.
 
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் காயத்ரி ரகுராமைதான் பலரும் வெளியே அனுப்பவேண்டும் என்று கூறிவரும் நிலையில், காயத்ரியை ஓவியா பேசியதை பார்த்து அனைவரும் சிரிக்கதான் செய்தார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget