Ads (728x90)

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒரு நிருபரிடம் நடிகரும், லட்சிய திமுக நிறுவனருமான டி.ராஜேந்தர் கோபமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.நேற்று, ஜி.எஸ்.டி வரிக்கு எதிராக போராட்டம் நடத்தபோவதாக அறிவித்த டி.ஆர், தனது ஆதரவாளர்கள் புடைசூழ செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் ஜி.எஸ்.டி-வரிக்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது ஒரு நிருபர்  ‘போராட்டம் எனக் கூறினீர்கள். ஆனால், 50 பேர் கூட இல்லையே’ எனக் கிண்டலடிக்கும் விதமாக கேள்வி கேட்டார். இதனால், கோபமடைந்த டி.ஆர்., தனது வேட்டியை மடித்துக்கொண்டு அவரிடம் சென்று சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்தார். 
மேலும், வழக்கமான தனது அடுக்கு மொழி பாணியில், இது குவாட்டருக்கு வந்த கூட்டம் இல்லை.. என் மேட்டருக்காக வந்த கூட்டம்.. இது பிரியாணிக்காக வந்த கூட்டம் இல்லை..என் மேல இருக்குற பிரியத்திற்காக வந்த கூட்டம்’ என பேசிக் கொண்டே சென்றார். இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget