மகாலட்சுமியை மிக எளிதாக வழிபடலாம். மிகுந்த பிரயாசை எல்லாம் தேவையில்லை. கன்று ஈன்ற பசுவின் சாணத்தை கொண்டுவந்து அதில் அகல் போல் செய்து உடைந்து விடாமல், நிழலில் காய வைக்கவும்.
வழிபாடு தொடங்கும் முன், பூஜை அறையை சுத்தம் செய்து, கோலமிட்டு, மகாலட்சுமி படத்திற்கு பூமாலை சூட்டி குத்து விளக்கேற்றவும். பின் சாண அகலில் நெய் விட்டு, பஞ்சுத் திரி, வாழை தண்டு திரி, தாமரை திரி போன்ற எதாவது ஒன்றை பயன்படுத்தி வௌ்ளிக்கிழமை அன்று விளக்கேற்றி தேவியை வழிபட வேண்டும்.
தெரிந்த மகாலட்சுமி மந்திரம் கூறினாலே போதும். பாயசம், எலுமிச்சை சாதம் அல்லது ஏதாவது பழம், வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்யவும். இவ்வாறு 5,7, 9 வாரங்கள் என முடிந்த அளவு விளக்கேற்ற அன்னையின் அருள் நிச்சயம் கிட்டும்.
ஒவ்வொரு வாரமும் புது அகல் செய்து தீபம் ஏற்ற வேண்டும். பழைய அகல் தீபத்தை தண்ணீரில் கரைத்து துளசி மாடம், அல்லது ஏதாவது செடியில் கால்படாத இடத்தில் சேர்க்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment