சிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ரியான் பர்ல் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவு ஒவ்வாமை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை பாரதூரமானதல்ல எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையிலேயே சிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ரியான் பர்ல் உணவு ஒவ்வாமை காரணமாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment