மோகன்லால்-விஷால் இணைந்து மலையாளத்தில் நடித்து வரும் 'வில்லன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்களை சீரான இடைவெளியில் வெளியிட்டு ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன்.. ஆரம்பத்தில் மோகன்லால் கெட்டப், அடுத்தததாக விஷால் கெட்டப் என பர்ஸ்ட்லுக் போஸ்டர்களை வெளியிட்டவர், தற்போது மோகன்லாலும் விஷாலும் எதிரும் புதிருமாக முறைத்துக்கொண்டு நிற்பது போன்ற புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
இந்தப்படத்தில் மேத்யூ மஞ்சூரான் என்கிற போலீஸ் அதிகாரியாக மோகன்லால் நடிக்கிறார். அவருக்கு படத்தில் இரண்டுவிதமான கெட்டப்புகள் இருக்கிறதாம். அவரைப்போலவே படத்தில் டாக்டர் கேரக்டரில் நடிக்கும் விஷாலுக்கும் இரண்டுவித கெட்டப்புகளும் இருக்கின்றனவாம். விஷாலின் கேரக்டர் நெகடிவ் சாயல் கலந்தது என்று சொல்லப்பட்டாலும், அதில் ட்விஸ்ட் ஒளிந்துள்ளது என்பது மட்டும் உண்மையாம்.
மேலும் இந்தப்படத்தில் ராசி கன்னா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மஞ்சு வாரியர் மோகன்லாலின் மனைவியாக நடிக்கிறார். அதேசமயம் ஹன்ஷிகாவின் கேரக்டர் சஸ்பென்சாகவே வைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment