சந்தா மாமா டோர் கி படத்தில் நடிப்பதற்கு பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக நடிகர் சூஷந்த் சிங் ராஜ்புட் விரைவில் நாசா செல்ல உள்ளாராம். இந்த படத்தில் சூஷந்த் வானியல் ஆராய்ச்சியாளராக நடிக்கிறாராம்.
ஜூலை 21 முதல் 24 வரை சூஷந்த் நாசாவில் பயிற்சி எடுக்க உள்ளாராம். புவிஈர்ப்பு விசை இல்லாத இடங்களில் பறப்பது, நிலாவில் நடப்பது போன்ற அனுபவங்களை நேரில் பார்த்து அதற்கான பயிற்சியை சூஷந்த் எடுத்துக் கொள்ள உள்ளாராம். தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதற்காக எல்லா விதங்களிலும் தன்னை தயாரிப்படுத்திக் கொள்கிறாராம்.
சஞ்சய் புரான் சிங் கவுகான் இயக்கும் சந்தா மாமா டோர் கி படத்தை விகி ராஜானி தயாரிக்க உள்ளார். மும்பை, ஐதராபாத், டில்லி ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் நடத்தப்பட உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment