டைரக்டர் அனுராக் பாசு இயக்கி உள்ள படம் ஜாக்கா ஜாசோஸ். இப்படத்தை ரன்பீர் கபூர் நடித்து, தயாரித்துள்ளார். இவருடன் இணைந்து சித்தார்த் ராய் கபூர், அனுராக் பாசு ஆகியோரும் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் ரன்பீர் கபூருடன், கத்ரினா கைப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 14 ம் தேதி ரிலீசாக உள்ளது.
தற்போது இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் ரன்பீர் கபூர். இப்படத்தில் ரன்பீர், துடிப்பான இளம் வயது டிடெக்டிவாக நடித்துள்ளார். இந்த படம் பற்றி சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரன்பீர், தான் இப்படத்தை தேர்வு செய்தது ஏன் என்ற காரணத்தை வெளியிட்டார். பேட்டியில் அவர் கூறுகையில், பிளே பாய் மற்றும் ரொமான்டிக் கேரக்டர்களில் நடித்து அலுத்து போய் விட்டது.
துணிச்சலான, சவாலான கேரக்டர்களில் நடிப்பதற்கே நான் விரும்புகிறேன். இந்த ஆண்டுடன் எனக்கு 35 வயது ஆகிறது. இனி ரொமான்டிக் பிளேபாய் கேரக்டர்களில் நடிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். துணிச்சலான ரோல்களில் இனி நடிக்க உள்ளேன். பிளேபாய் ரோல்களை வைத்து இனியும் காலம் தள்ள முடியாது என நான் நினைக்கிறேன் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment