கணவர் போனி கபூர் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்துள்ள மாம் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ரவி உதய்வார் இயக்கி இருந்தார். ஆடன் சித்திக் சாஜல் அலி நடித்திருந்தனர். அனய் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்திருந்தார், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார்.
மகளை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களை தேடி வேட்டையாடும் ஒரு தாயின் கதை. இதேபோன்ற கதை அமைப்புடன் இதே ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த இந்தி படம் மாட்ர். இதுவும் மகளை பலாத்காரம் செய்தவர்களை பழிவாங்கும் தாயின் கதைதான். காரில் பலாத்காரம், தாய் தேடி தேடி பழிவாங்கல்,
தாயை கண்காணிக்கும் போலீஸ் என திரைக்கதையும்கூட ஒரே மாதிரியானவைதான். மாம் படத்தில் ஸ்ரீதேவியின் கணவரின் முதல் மனைவின் மகள் பாதிக்கப்பட்டிருப்பார் . மாட்ரில் சொந்த மகள் என்பதுதான் வித்தியாசம். இதில் ரவீனா கொஞ்சம் சண்டையெல்லாம் போடுவார், ஸ்ரீதேவி சண்டைபோட மாட்டார்.
எது எந்த படத்தின் காப்பி என்று தெரியவில்லை. என்றாலும் சில மாத இடைவெளியில் ஒரே மாதிரியான கதையில் இரண்டு பெரிய படங்கள் வெளிவந்திருப்பது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment