Ads (728x90)

கனடாவில், இந்திய வம்சாவளியினர் கட்டியுள்ள, சுவாமி நாராயண் கோவிலில் நடந்த விழாவில், அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியா, இந்திய பாரம்பரிய உடையுடன் பங்கேற்று, வழிபாடு நடத்தினார்.
வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள டொரான்டோ நகரில், ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்; அங்கு அவர்கள், பிரமாண்டமான சுவாமி நாராயண் கோவிலை கட்டிள்ளனர். இந்த கோவில் கட்டப்பட்டு, 10 ஆண்டு முடிவடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம் விழா நடந்தது. இதில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியா, பங்கேற்றார்.

இந்திய பாரம்பரிய உடையான பைஜாமா - குர்தாவில் வந்த அவருடன், டொரான்டோ நகர மேயர், ஜான் டோரி மற்றும் கனடா நாட்டிற்கான இந்திய துாதர், விகாஸ் ஸ்வரூப் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கனடா பிரதமர் ஜஸ்டினுக்கு மாலை அணிவித்து, கோவில் நிர்வாகிகள் அழைத்து சென்றனர். இதன்பின், சுவாமி நாராயண் சிலைக்கு அபிஷேகம் செய்து, அவர் வழிபட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, சமூகவலை தளமான, 'டுவிட்டரில்' அவர் வெளியிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget