ஜிம்பாப்வேக்கு எதிரான தோல்வியால், மாத்யூஸ் தலைமையிலான இலங்கை அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2019 உலக கோப்பை தொடருக்கு நேரடியாக தேர்வு பெறுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இலங்கை அணி தனது சொந்தமண்ணில், ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை 2–3 என, இழந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே, ஐ.சி.சி., வௌியிட்ட அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 5 புள்ளிகள் குறைந்து, 88 புள்ளிகள் பெற்று, 8வது இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீசை (9வது இடம்) விட 10 புள்ளிகள் குறைவாக உள்ள இலங்கை அணி, வரும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், ஓரிரு போட்டிகளில் கட்டாயம் வெல்ல வேண்டும்.
இல்லை எனில், இலங்கை அணி 9வது இடத்துக்கு தள்ளப்படும். ‘ரேங்க்’ பட்டியலில் ‘டாப்–8’ இடத்துக்குள் உள்ள அணிகள் மட்டும், 2019 உலக கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும்.
இலங்கை அணி 9வது இடம் பிடித்தால், பின், இதற்கான தகுதிச்சுற்றில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படும்.
அதேநேரம், வரவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் செயல்பாட்டினை பொறுத்து, இலங்கை அணியின் தரவரிசையில் மாற்றம் ஏற்படலாம்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment