ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சிறுவன் பிராட்லி லோவரின் மரணம், கால்பந்து அரங்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் ஜெம்மா லோவரி, கார்ல் லோவரி தம்பதியின் மகன், பிராட்லி லோவரி, 6. பிறந்த 19 வது மாதத்தில் ‘நியூரோபிளாஸ்டமா’ என்ற அபூர்வ வகை ‘கேன்சரால்’ பாதிக்கப்பட்டான்.
‘கீமோதெரபி’ சிகிச்சையை சிறுவயதிலேயே எதிர்கொண் பிராட்லி, கேன்சரில் இருந்து மீண்டார். இவருக்கு 2016, ஜூலை மாதம் மறுபடியும் கேன்சர் வந்தது. இதற்கான சிகிச்சையை தாங்கும் அளவுக்கு உடல் தயாராக இல்லை என டாக்டர்கள் கைவிரித்தனர். இந்த நேரத்தில் கால்பந்து விளையாட்டு தான் பிராட்லிக்கு சிறந்த மருந்தாக அமைந்தது. கால்பந்து மோகம் கொண்ட இவனுக்கு இங்கிலாந்து வீரர் ஜெர்மைன் டிபோ மீது அளவில்லாத பிரியம். இவனுக்கு பிடித்த சண்டர்லேண்ட் அணிக்காக, ஜெர்மைன் விளையாடியது தான் இதற்கு காரணம்.
இந்த அணி பங்கேற்ற பல போட்டிகளில் ஜெர்மைனுடன் சேர்ந்து களமிறங்கினான். வெகுவிரைவில் மரணிக்கப் போகின்ற மகனின், மகிழ்ச்சியை பார்த்து அவரது பெற்றோர் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள கால்பந்து உலகம் கண்ணீர் சிந்தியது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக கேன்சருடன் துணிச்சலாக போராடிய பிராட்லி, சமீபத்தில் (07/07/17) மரணமடைந்தான்.
இதுகுறித்து ஜெர்மைன் கூறுகையில்,‘‘ என் இதயத்தில் எப்போதும் உனக்கு இடம் உண்டு. இப்போது கடவுளின் கைகளில் உள்ள நீ, அவரை இறுக்கமாக பிடித்துக் கொண்டு துாங்கு,’’, என, கண்ணீருடன் தெரிவித்தார்.
பிராட்லியின் இறுதிச் சடங்கு வரும 14ம் தேதி இங்கிலாந்தின் துர்காமில் நடக்க உள்ளது. சண்டர்லேண்ட் மைதானத்தின் ஒரு பகுதிக்கு பிராட்லியின் பெயரை வைக்க வேண்டுமென ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது, மகத்தான கால்பந்து ரசிகனுக்கு செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment