காயத்ரி மட்டுமல்ல ஆர்த்தியும் சேர்ந்து ஆரம்பம் முதலே ஜூலியை டார்கெட் செய்து வருகின்றனர். ஜூலியை தவிர மற்றவர்கள் எல்லாம் திரையுலகை சார்ந்தவர்கள் என்பதால் அவர் மீது பலமுனை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேமரா இருப்பதையும் மறந்து, தன்னுடைய கோபத்தை காட்ட தொடங்கிவிட்டார். உங்களை போல டிஆர்பிக்காக என்னால் நடிக்க முடியாது என ஜூலி சொல்ல, அது காயத்ரி ரகுராமுக்கு அதிக கோபத்தை வரவழைத்துவிட்டது. ஜூலியை நேரடியாகவே என்ன குளிர் விட்டு போச்சா, எலிமினேஷன் முடிஞ்சிடுச்சின்னு ஆடுறியா என கோபத்துடன் பேச, ஜூலியோ எனக்கு நடிக்க தெரியாது நான் எப்பவும் போலதான் இயல்பா இருக்கேன் என்கிறார்.
காயத்ரி மற்றும் ஆர்த்தி ஜூலியை மட்டும் வெறுத்து ஒதுக்கி பழிதீர்க்க நினைக்க என்ன காரணம். ஒரு வேளை இங்கும் அரசியல் சாயம் பூசப்படுகிறதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் கேட்டப்பட்டு வருகிறது.
Post a Comment