Ads (728x90)

நடிகை பாவனாவின் திருமணத்தை நிறுத்துவதற்காகவே, அவரை மர்ம கும்பல் காரில் கடத்தி வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனாவை சிலர் காரில் கடத்தி பாலியல் தொந்தரவு செய்தனர். அது தொடர்பாக பல்சர் சுனில் என்பவர் உட்பட சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக சமீபத்தில் அவரிடமும், அவரது மேலாளர் அப்புண்ணி மற்றும் இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடமும் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
 
மேலும், பாவனாவை காரில் கடத்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோவை, காவ்யா மாதவன் நடத்தி வரும் ஆடை நிறுனத்தில் பணிபுரியும் ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சர் சுனில் கடிதத்தில் தெரிவித்ததை அடுத்து, காவ்யா மாதவனின் கடையில் போலீசார் கடந்த 1ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அதில் அந்த வீடியோவை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.
 

மேலும், திலீப் மற்றும் காவ்யா மாதவனுக்கு எதிராக பல முக்கிய வலுவான ஆதரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதால் அவர்கள் இருவரும் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவியது. இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக தற்போது தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், பல்சர் சுனில் மற்றும் சிலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாவனாவின் திருமணத்தை நிறுத்தவே இந்த கடத்தல் சம்பவத்தை சிலர் அரங்கேற்றியுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பாவனாவிற்கும் கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனால், நவீனின் ஆதரவில் பாவனா பெங்களூரில் வசித்து வந்தார். மேலும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்திருந்தார். 
 
இந்த விவாகரம் மலையாள சினிமா உலகை சேர்ந்த சில நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. எனவே, பல்சர் சுனிலை பயன்படுத்தி பாவனாவை காரில் கடத்தியுள்ளனர். அவரை அலங்கோலமாக வீடியோ எடுத்து, அதை அவரின் காதலர் நவீனுக்கு அனுப்பி எப்படியாவது அவர்களின் வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
 
போலீசார் கைப்பற்றியுள்ள அந்த வீடியோவில், பாவனாவிடம் அவரை கடத்தியவர்களில் சிலர்  ‘நீ எப்படி அவனை(நவீன்) திருமணம் செய்து கொள்கிறாய் என நாங்கள் பார்க்கிறோம்’ என கூறுவது பதிவாகியுள்ளது. எனவே இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்ற விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர். எனவே, மேலும் சிலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் எனத் தெரிகிறது

இந்த சம்பவத்திற்கு பின் கடந்த மார்ச் மாதம் மாதம் எளிமையான முறையில் பாவனாவும், நவீனும் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget