Ads (728x90)

காஜல் அகர்வால் சினிமாவில் நடிக்க வந்து பத்து வருடங்களாகி விட்டது. நடிக்கத் தொடங்கியதில் இருந்து இப்போது வரை அவருக்கான மாஸ் குறையாமல் இருந்து வருகிறது. தமிழில் எப்படி விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறாரோ, அதேப்போல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அந்தவகையில், பத்து வருடங்களில் 50 படங்களில் நடித்து விட்டார் காஜல் அகர்வால்.

இந்நிலையில், இப்போது 32 வயதாகியுள்ள காஜல் அகர்வால், ஆரம்பத்தில் எப்படி இளமையாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தாரோ அதேபோல் இப்போது வரை இளமையாக காணப்படுகிறார். ஆனால், காஜல்அகர்வால் இத்தகைய இளமைக்கு காரணம், அவர் ரகசியமாக செய்த தோல் அறுவை சிகிச்சைதான் என்றொரு செய்தி டோலிவுட்டில் பரவியுள்ளது.

இந்த செய்தி காஜல் அகர்வாலின் காதுக்கு சென்றபோது உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு, இளமையை பாதுகாக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை. நான் எனது உடம்பை இளமையாக வைத்திருக்க தேவையான உடற்பயிற்சிகள், உணவுகளை பின்பற்றி வருகிறேன். அப்படி யார் செய்தாலும் அவர்கள் நீண்டகாலம் இளமையாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார் காஜல்அகர்வால்.

Post a Comment

Recent News

Recent Posts Widget