விஐபி 2' படத்தை அடுத்த 'விஐபி 3' மற்றும் 'விஐபி 4' ஆகிய படங்களும் கண்டிப்பாக வரும். கஜோல் மேடம் கண்டிப்பாக 3ஆம் பாகத்தில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் அவர் 3ஆம் பாகத்தில் நடந்து கொள்வதை பொறுத்துதான் அவரது கேரக்டரை கொலை செய்வதா? அல்லது 4வது பாகத்திற்கு எடுத்து செல்வதா? என்பது குறித்து முடிவு செய்வேன்' என்று கூறினார்.
'விஐபி' முதல் பாகத்தை போல் இல்லாமல் இந்த படம் வேற உலகம் என்றும், இந்த உலகத்திற்கு கண்டிப்பாக கஜோல் தேவைப்பட்டதாகவும் கூறிய தனுஷ், தேவைப்பட்டால் அடுத்த பாகத்திற்கு அனிருத்தை இசையமைக்க அழைப்பேன்' என்று கூறினார்.

Post a Comment