Ads (728x90)


ரஜினியின் பிறந்த தேதியை, ஒரு படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி ரஜினி பிறந்தார். அதையே, ’12-12-1950’ என படத்தின் தலைப்பாக வைத்துள்ளார் நடிகரும், இயக்குனருமான செல்வா.

“ரஜினி மற்றும் அவருடைய படங்களின் தீவிர ரசிகன் நான். ரஜினி ரசிகர்கள் நான்கு பேரைப் பற்றியதுதான் இந்தக் கதை. ‘முத்து’, ‘பாட்ஷா’, ‘பில்லா’, ‘எஜமான்’ என ரஜினி சார் படங்களின் பெயரையே அவர்கள் நால்வருக்கும் வைத்துள்ளேன். 

ரமேஷ் திலக், தம்பி ராமையா, யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். 72 சதவீதம் காமெடியாகவும், 28 சதவீதம் ஜி.எஸ்.டி.யாகவும் இந்தப் படம் இருக்கும். ஜி.எஸ்.டி. என்றால் கேங்ஸ்டர், ஸ்டண்ட் மற்றும் த்ரில்லர்” எனச் சிரிக்கிறார் செல்வா. கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி ரஜினியைச் சந்தித்து ஆசிபெற்ற செல்வா, அந்த மாதமே ஷூட்டிங்கை ஆரம்பித்து, ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget