Ads (728x90)

ஜப்பானில் ஆண்கள் மட்டுமே செல்ல முடியும் தீவு, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பெண்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் ஆண் பார்வையாளர்கள் முதலில் அங்குள்ள கடலில் நிர்வாணமாகக் குளிக்க வேண்டும்.
ஜப்பான் கிழக்கு கடலின் ஒகினோஷிமா பகுதியில் உள்ள இந்த தீவுக்கு குறிப்பிட்ட அளவிலான ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பாக இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கினர்.
இந்தப் பகுதியை ஷிண்டோ குரு நிர்வகிக்கிறார். தீவின் பெண் கடவுளை அவர் வழிபடுவார்.

என்ன விதிகள்?
கோயிலுக்குச் செல்பவர்கள் ஆண்களாக இருக்க வேண்டும், அத்துடன் நிர்வாணமாகக் கடலில் குளித்து, தங்களை புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பார்வையாளருக்குத் தடை
இந்நிலையில் தீவுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு பார்வையாளர்கள் வருகைக்குத் தடை விதிக்க கோயில் நிர்வாகத்தினர் ஆலோசித்து வருகின்றனர். பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமானால், அது தீவையே அழித்துவிடும் என்று எண்ணுவதால் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
இது அமலானால் இனி கோயில் குருக்கள் மட்டுமே தீவுக்குச் செல்ல முடியும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget