இதுதொடர்பாக ஜி20 அமைப்புக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தற்போது தெற்கு சூடான், சாட், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உணவு, குடிநீர் இன்றி வாடுகின்றனர். இதேபோல பல்வேறு நாடுகளில் உள்நாட்டு குழப்பம் காரணமாக அகதிகள் பரிதவித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் நாடுகளில் நுழைந்து விடாமல் தடுக்க பணக்கார நாடுகள் எல்லைகளை மூடிவிட்டன. அடைத்த கதவுகளை மீண்டும் திறக்க வேண்டுகிறேன்.
தேக்க நிலையில் இருந்து உலக பொருளாதாரத்தை மீட்பது மட்டுமே ஜி20 நாடுகளின் லட்சியமாக இருக்கக்கூடாது. அகதிகள், ஏழைகளை அரவணைத்து அவர் களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். உலகளாவிய அளவில் ஆயுத போட்டியை கைவிட வேண்டும். உள்நாட்டு குழப்பங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எந்தவொரு பிரச்சினைக்கும் போர் தீர்வு ஆகாது. என போப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment