Ads (728x90)


இருநாட்டு எல்லை பிரச்சினையால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு பயணம் செய்வோர் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என தங்கள் நாட்டு மக்களுக்கு சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளள்ளது.

சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாட்டு எல்லைகளும் சந்திக்கின்றன. அங்குள்ள டோகா லா என்ற பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்க முயற்சி செய்தது. மேலும் இந்திய பகுதிக்குள் இருந்த 2 பதுங்கு குழிகளையும் அவர்கள் சேதப்படுத்தினர். 

இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நீடிக்கிறது. இதனால் இரு நாட்டு ராணுவமும் அப்பகுதியில் ராணுவத்தை குவித்துள்ளதால் போர் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள சீன தூதரகம் நேற்று ஒரு அறிக்கையை சீன மொழியில் வெளியிட்டது. அதில், “இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும், தங்களுடைய உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவையின்றி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். 

ஒருவேளை இந்தியாவில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அந்நாட்டு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் உள்ளூர் மத நடைமுறைகளையும் மதித்து நடக்க வேண்டும். தங்களுடன் அடையாள ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அவசர தேவை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும்” என கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அது பயண எச்சரிக்கை அல்ல. சீனர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று மட்டுமே அறிவுறுத்தப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget