Ads (728x90)



செய்திகள் சார்ந்த செயலிகளில் மிகவும் வித்தியாசமானதாக ஸ்னிப்ட் அமைந்துள்ளது. இந்தச் செயலி செய்திகளைச் சுருக்கமாக மட்டுமல்ல, சுவாரசியமான முறையிலும் வழங்குகிறது. அதாவது செய்திகளை ஜிஃப் மற்றும் வீடியோ மீம்கள் வடிவில் வழங்குகிறது.

இந்தச் செயலியில் விளையாட்டு, தொழில்நுட்பம், அறிவியல், இந்தியா, சர்வதேசம் எனப் பல பிரிவுகளில் உங்களுக்கு விருப்பமான பகுதிகளைத் தேர்வு செய்துகொள்ளலாம். அதன் பிறகு அந்தப் பிரிவு செய்திகளை ஜிஃப் வடிவில் அல்லது 4 நொடி சுருக்கமான வீடியோ மீம்களாகப் பார்க்கலாம்.

செய்திகள் தொடர்பான வீடியோ மீம்கள் அல்லது ஜிஃப்களை ஒரே இடத்தில் அணுகுவதையும் இந்தச் செயலி எளிதாக்குகிறது. ஜிப்களைக் கண்டு ரசித்த பிறகு மேற்கொண்டு தகவல்கள் தேவையெனில், 150 வார்த்தை சுருக்கத்தையும் வாசிக்கலாம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget