Ads (728x90)

இசையமைப்பாளரும், பிரபல வழக்கறிஞருமான ஜெரோம் புஷ்பராஜின் வாரிசு, அஸ்வின் ஜெரோம் கதாநாயகராக அறிமுகம் ஆக, அவருடன் வர்ஷா பொள்ளம்மா, ராஜூ சுந்தரம், பொன்வண்ணன், விடிவி.கணேஷ், சந்தானபாரதி, மதுமிதா, மீரா கிருஷ்ணன்... ஆகிய பிரபலங்கள் நடிக்க, பிரஷாந்த் ஜி.சேகர் இயக்கத்தில், பெப்பி சினிமா தயாரிப்பில் வெளிவந்திருக்கும் மற்றுமொரு தாதாயிஸ தமிழ் படமே "யானும் தீயவன்".

தங்கள் லவ்வுக்கு பேரன்ட்ஸ் நோ சொன்னதால் பிரண்ட்ஸ் உதவியுடன் ரிஜிஸ்தர் மேரேஜ் செய்து கொண்ட அஸ்வினும், வர்ஷாவும், அதே ப்ரண்ட்ஸ் உதவியுடன் ஊருக்கு ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில் சில நாட்களுக்கு வசிக்கின்றனர். அந்த வீட்டின் இன்னொரு பகுதியில், அஸ்வினிடம் ஏற்கனவே ஒரு பிரச்சினையில் செம அடி வாங்கி, முகத்தில் மார்க்கும் வாங்கி, அஸ்வினைத் தேடி வரும் தாதா ராஜுசுந்தரமும் அவரது ஆட்களும் தலைமறைவு வாழ்க்கை நடத்துவது அஸ்வினுக்குத் தெரியாது.

இந்நிலையில் ராஜு சுந்தரம் அந்த வீட்டில் வைத்து தன்னுடன் உல்லாசமாக இருக்க வந்த ஒரு பெண்ணை கொலை செய்ய, அதை அஸ்வினின் காதல் மனைவி வர்ஷா பார்த்து விட்டு அஸ்வினிடம் கூற, இருவரும் அங்கிருந்து எஸ்கேப் ஆகத்தயார் ஆகும் நிலையில், அங்கு நிற்கும் அஸ்வினின் காரை வைத்து அவரையும், வர்ஷாவையும் சுற்றி வளைக்கும் ராஜூ சுந்தரமும், அவரது ஆட்களும் அஸ்வின் - வர்ஷா ஜோடியை தங்கள் பழைய பகைக்கு கடத்தி கட்டிப் போட்டு சித்ரவதை செய்கிறார். வர்ஷா - அஸ்வின் தப்பி பிழைத்தனரா..? என்பதற்கு திக், திக், திக் திருப்பங்களுடன் திகில் விடை சொல்கிறது "யானும் தீயவன்" படத்தின் மீதி கதையும், களமும்!

இதில் கதாநாயகராக ஆஜானுபாகுவாக அறிமுகமாகியிருக்கும் அஸ்வின் ஜெரோமுக்கு லவ்வை விட ஆக்ஷ்ன் அம்சமாக வருகிறது. அதற்காக வர்ஷாவுடனான காதல் காட்சிகளில் மனிதர் பின் தங்கி தெரிவதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. அஸ்வினுக்கு ரொமான்ஸ் ஓ.கே. ஆக்ஷன் டபுள் ஒகே என்பதே இதன் அர்த்தம். தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து முயற்சித்தால் அஸ்வின் தமிழ் சினிமாவில் தனியிடம் பிடிக்கலாம்!

ஏற்கனவே சில படங்களில் வர்ஷா எனும் பெயருடன் தோன்றி நன்றாகவே நடித்து வந்த இளம் நடிகை, இதில் வர்ஷா பொள்ளம்மா எனும் தன் முழுப்பெயருடன் டைட்டில் கார்டில் என்ட்ரி கொடுத்து, நடிப்பில் கூடுதலாய் ரசிகனின் கவனம் ஈர்த்திருக்கிறார்.

தன் 18 வருஷ தாதாயிஸ வாழ்க்கையில் 21 கொலைகள் செய்த தாதாவாக டான்ஸர் ராஜூ சுந்தரத்தை பாக்ஸராக, பலே கில்லாடி டானாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை நிச்சயம், அவரது நடை, உடை, பாவனைகளில் இது மாதிரி பாத்திரங்களுக்கு நிறைய மாற்றம் வேண்டும்.

போலீஸ் பொன்வண்ணன், வக்கில் விடிவி.கணேஷ், மினிஸ்டர் சந்தானபாரதி, ப்ரண்ட்ஸ் மதுமிதா, அருன் ராஜா காமராஜ், பேரன்ட்ஸ் பாய்ஸ் ராஜன், மீரா கிருஷ்ணன்... ஆகிய அனைவரும் கச்சிதம்.

பிரசன்னா ஜி.கேயின் படத்தொகுப்பில் பின்பாதி சற்று இழுவை என்றாலும் பெரிய பழுதில்லை. லவ், ஆக்ஷன் காட்சிகளில் அது அதற்கேற்ற வெளிச்சம் தந்திருக்கிறது ஸ்ரேயாஷ் கிருஷ்ணாவின் ஒவிய ஒளிப்பதிவு.

அச்சு ராஜாமணியின் இசையில், "இந்த நேரம் இன்ப நேரம்...", "ஆகாயமே உன்னை கேட்கிறேன்....", "அச்சத்தை காலில் போட்டு மீதிப் பேன்..." ஆகிய பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.

பிரஷாந்த் ஜி.சேகர் இயக்கத்தில், "செளம்யா, அவ., எனக்கும் பொண்ணு மாதிரி தான் என, பக்கத்து வீட்டு போலீஸ் அதிகாரி பொன்வண்ணன் சொல்லும் போது, நாயகியின் அப்பா பாய்ஸ் ராஜன் ஏதோ டயலாக் அடிக்க வேண்டும் என்பதற்காக ஷூர் சார்..... என்பதும் அது மீனிங் மாறிப் போய் தியேட்டரில் வெடிச் சிரிப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட குறைகள்.... பெருங் காமெடிகளாக தெரிந்தாலும், பின்பாதியில் எல்லோரையும் பொட்டு, பொட்டென்று போட்டுத்தள்ளும் தாதா நாயகனையும் நாயகியையும் கட்டி வைத்து இழுத்துக் கொண்டே திரியும் காட்சிகளால் நீண்டு கொண்டே போகும் இழுவை சீன்கள் ஏகமாய் இருந்தாலும், "டீயை விட கப்பு சூடா இருக்கு...." எனும் டபுள் மீனிங் வசனங்களும் ஆங்காங்கே வந்தாலும், போனாலும், "அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்தால் தான் ரவுடிகள், தாதாக்கள் போலீஸைத் தாண்டி கோலோச்சுகிறார்கள்..." என்பதையும், "எதிர்ப்புகளை தாண்டிய காதல் திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்..." என்பதையும் மிக அழகாக சொல்லியிருக்கும்
  "யானும் தீயவன் - இளைஞர்களை கவருவான்!"

Post a Comment

Recent News

Recent Posts Widget