
பாதுகாப்பு அங்கி இல்லாததால் நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்துக்குச் சென்றவர்களை கடற்படையினர் தடுத்தனர். அதனால் நீண்ட நேரம் குறிகாட்டுவான் இறங்குதுறையில் காத்திருக்க வேண்டியிருந்தது என்று மக்கள் குற்றஞ்சாட்டினர்.
கடற்படையின் இந்தக் கெடுபிடியால் தேர் உற்சவ நேரத்துக்கு செல்ல முடியாது மக்கள் மனக்கிலேசமடைந்தனர்.
வேலணைப் பிரதேச செயலர் உடன் எடுத்த நடவடிக்கையை அடுத்து அவர்கள் கடற்பாதைப் படகின் மூலம் நயினாதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
Post a Comment