Ads (728x90)

தனுஷ் குடும்பத்தின் வெறுப்புக்கு ஆளாகியிருப்பதால், 'விஐபி 2' படத்தில் இருந்து தன்னுடைய காட்சிகளை குறைத்துவிடுவார்களோ என்ற கலக்கத்தில் இருக்கிறாராம் அமலா பால்.செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'விஐபி 2' படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அமலா பால். ஏற்கெனவே வெளியான முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும்போதே தனுஷுக்கும், அமலா பாலுக்கும் 'சம்திங் சம்திங்' என்று சொல்லப்பட்டது. ஒருகட்டத்தில், தன்னுடைய கணவரான இயக்குனர் ஏ.எல்.விஜய்யை அமலா பால் பிரியக் காரணமே தனுஷ் தான் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், அமலா பாலை சந்திக்கக் கூடாது என தனுஷுக்கு குடும்பத்தார் உத்தரவு போட, 'வட சென்னை' படத்தில் இருந்தே விலக்கப்பட்டார் அமலா பால். அத்துடன், 'விஐபி 2' புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் புறக்கணிக்கப்படுவதால், படத்தில் தன்னுடைய போர்ஷன்களைக் குறைத்திருப்பார்களோ என்று கலக்கத்தில் இருக்கிறாராம் அமலா பால்.

Post a Comment

Recent News

Recent Posts Widget