Ads (728x90)

விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, விஜய்யை சந்திக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய், விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசினார். அந்தப் பேச்சை, பலரும் ஆதரித்தனர்.

இதுதொடர்பாக தேசிய நதிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவரான அய்யாக்கண்ணுவிடம் கேட்டபோது, "விவசாயிகளுக்கு ஆதரவாக விஜய் குரல் கொடுத்ததில் மகிழ்ச்சி. அதுபோன்று யாராவது குரல் கொடுக்க மாட்டார்களா என்று காத்திருந்தோம். எனவே, விஜய்யை சந்தித்து, பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யலாம் என்று நினைத்தோம். எங்களுடைய புராஜெக்ட் முடிவுக்கு வரும்போது விஜய்யைச் சந்தித்து, மரியாதை செய்வோம்" என்று தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget