Ads (728x90)

தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட அவர்கள் வளர்ந்த காலத்தில் சேர்ந்து பல படங்களில் நடித்தார்கள். ஆனால், இப்போது ஒரு படத்தில் நாயகனாக நடித்து வெற்றி பெற்றால் கூட, வேறு யாருடனும் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடித்துவிடக் கூடாது என்று இன்றைய பல ஹீரோக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே யார் தங்களுடன் நடிப்பது என்று கூடப் பார்க்காமல் கதை நன்றாக இருந்தால் நடிக்க சம்மதிக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் தற்போதைக்கு வித்தியாசமான நாயகன் என்ற பெயரெடுத்துள்ள விஜய் சேதுபதி எந்த ஒரு வட்டத்திற்குள்ளும் சிக்காத ஒரு நாயகனாகவே இருக்கிறார். நல்ல கதை அமைந்தால் வயதானவராகவும் நடிக்கிறார், வில்லனாகவும் நடிக்கிறார். மல்டி ஸ்டார் படங்களிலும் நடிக்கிறார். அப்படி விஜய் சேதுபதி, மாதவன் முதன் முறையாக இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' படம் இந்த வாரம் வெளிவர உள்ளது.

தமிழில் கடைசியாக கடந்த வருடம் வெளிவந்த 'தோழா' படம் தான் மல்டி ஸ்டார் படமாக வந்தது. அதன் பின் இப்போது 'விக்ரம் வேதா' வெளிவர உள்ளது. அடுத்து விஷால், கார்த்தி நடிக்கும் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' தயாராகி வருகிறது. தமிழ் சினிமாவை மற்ற விவகாரங்களிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் அடிக்கடி மல்டி ஸ்டார் படங்கள் வருவது ஓரளவிற்குப் பிரச்சனையைத் தீர்க்க உதவும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget