அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை காலை 8 மணி முதல் 24 மணி நேர பணிப்பகிஸ்கரிப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
மருத்துவபீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை கடத்த முயற்சித்தமை உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளிலும் இவ்வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த தெரிவித்தார்.
எனினும், குறித்த காலப்பகுதியில் மகப்பேற்றுவைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக சிகிச்சைமையம், புற்றுநோய் வைத்தியசாலைகள் மற்றும் அவசரசிகிச்சை பிரிவு என்பன வழமைபோல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment