யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள், யாழ் மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் பணிப் புறக்கணிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிகப்படுள்ளனர்.
யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து வட மாகாண தனியார் பேரூந்துகள் இன்று திங்கட்கிழமை பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் வழமை போன்று உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று பாடசாலைகளில் தவணைப்பரீட்சைகள் ஆரம்பமாகின்றமையால் மாணவர்கள் ஆசிரியர்களின் தேவை கருதி இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை முச்சக்கர வண்டி சங்கங்களும் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தரிப்பிடங்களில் கறுப்பு கொடிகள் கட்டியுள்ளதுடன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பொலிஸ் பாதுகாப்பு அதிகாரிக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து பனரும் கட்டப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து யாழ் பஸ்நிலையத்திற்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இதேவளை நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்தும் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அஞ்சலி செலுத்தியும் அவர் கொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Post a Comment